×

விமான பயணிகளையும் ரயில் பயணிகளையும் ஒன்றாக கருதலாமா? மறைமுக ரயில் கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கேள்வி

விமான பயணிகளையும் ரயில் பயணிகளையும் ஒன்றாக கருதலாமா? தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பயணிகளிடம் பயனாளர் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேள்வி எழுப்புகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும் நடவடிக்கை விவகாரத்தில் அவர் இந்த கேள்வியை எழுப்புகிறார். தொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதன்மூலம் தொடர்வண்டிக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படுவதையும்
 

விமான பயணிகளையும் ரயில் பயணிகளையும் ஒன்றாக கருதலாமா? தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பயணிகளிடம் பயனாளர் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேள்வி எழுப்புகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தொடர்வண்டிக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும் நடவடிக்கை விவகாரத்தில் அவர் இந்த கேள்வியை எழுப்புகிறார்.

தொடர்வண்டி நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதன்மூலம் தொடர்வண்டிக் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயனாளர் கட்டணம் என்பதே அடிப்படையில் தவறு ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, பன்னாட்டு விமான நிலையங்களில் சில கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை திருப்பி எடுப்பதற்காக பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. அதே அடிப்படையில் தான் இப்போது தொடர்வண்டி பயனாளர் கட்டணம் என்ற புதிய முறை திணிக்கப்படுகிறது. இந்தத் தத்துவமே பெருந்தவறு ஆகும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் ராமதாஸ்,

விமானங்களில் பயணம் செய்பவர்களையும், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் ரூ.200 முதல் ரூ.400 வரை பயனாளர் கட்டணம் செலுத்துவது பெரிய சுமை அல்ல. ஆனால், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பேருந்து கட்டணத்தை விட கட்டணம் குறைவு என்பதற்காக தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் தான் அதிகம். தொடர்வண்டிகளில் பயனாளர் கட்டணமாக ஒரு பயணியிடம் ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிக்கப் பட்டால் கூட, அது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்; அதை அவர்களால் செலுத்த முடியாது என்கிறார்.

தொடர்வண்டி சேவை என்பது ஏழைகளுக்கானது ஆகும். அந்த சேவையில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மறைமுகக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால், தொடர்வண்டி சேவை என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும் என்கிறார்.