☰
×

இடைத்தேர்தல் தோல்வி- 4 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத சீமான்

 

தமிழகத்தில் நடந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக முதலிடம், திமுக இரண்டாம் இடம், அதிமுக மூன்றாம் இடம் பிடிக்க நாம் தமிழர் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தாராபுரத்தில் பி.சத்யபாமா (தவெக) - 66,841 வாக்குகள் பெற்று வெற்றி. எஸ்.சுகன்யா (திமுக) - 57,370, க.பானுமதி (அதிமுக) - 45,280. நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வெறும் 5,268 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மதுராந்தகத்தில் கே.மரகதம் குமரவேல் (தவெக) - 72,240 வாக்குகள் வெற்றி. இ.பரந்தாமன் (திமுக) - 52,098, எஸ்.கணிதா சம்பத் (அதிமுக) - 46,356. நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் 2,298 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்த தோல்விக்கு பிறகு சீமான் 4 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வளசரவாக்கம் அலுவலகம் செல்லவில்லை, நிர்வாகிகள் போனை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. "நிர்வாகிகள் வேலை செய்யலை, இவங்கள நம்பி அம்பாசமுத்திரத்தில் எப்படி நிக்கிறது?" என நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. இதனால் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் நேரடியாக நிற்பாரா?,  கூட்டணிக்கு போவாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற நாம் தமிழரின் முழக்கத்துக்கு தவெக புதிய சவாலாக வந்துள்ளதால் சீமானுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.