×

பதான் பாலியல் பலாத்காரம்.. யோகி ஆதித்யநாத் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது… பகுஜன்சமாஜ்

பதான் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை குறிப்பிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என்று பகுஜன்சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உகைத்தி பகுதியில் 50 வயதான அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரதேச பரிசோதனை செய்ததில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்து தெரியவந்தது. உத்தர பிரதேசத்தில் அடிக்கடி பெண்கள் பாலியல் பலாத்காரம்
 

பதான் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை குறிப்பிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என்று பகுஜன்சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் உகைத்தி பகுதியில் 50 வயதான அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரதேச பரிசோதனை செய்ததில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்து தெரியவந்தது. உத்தர பிரதேசத்தில் அடிக்கடி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பதான் பாலியல் பலாத்காரம் சம்பவம் குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி யோகி அரசை குற்றம் சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதிந்திர படோரியா இது தொடர்பாக கூறியதாவது: 2012ல் நடந்த கொடூரமான குற்றம் (டெல்லி கும்பல் கற்பழிப்பு) எங்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச பெண்களுக்கு யோகி அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. இது ஹத்ராஸ் முதல் பலரம்பூர் வரை பலமுறை நடந்துள்ளது.

சுதிந்திர படோரியா

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் பெண்கள், தலித்துக்கள் மற்றும் ஏழைகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறி விட்டது. யோகி ஜி தனது தோல்வி குறித்து நாட்டிற்கும், உத்தர பிரதேச மக்களுக்கும் சொல்ல வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியதற்காக காவல்துறையை சரி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.