×

எனக்கு கவர்னர் பதவி.. என் பையனுக்கு முக்கிய பதவி.. சரின்னா முதல்வர் பதவியை துறக்க தயார்.. பி.எஸ்.எடியூரப்பா

கர்நாடக பிரிவு பா.ஜ.க. தலைவர் நலின் குமார் கட்டீல் கடந்த சில தினங்களுக்கு 10 பேரை கட்சியின் துணை தலைவர்களாக நியமனம் செய்தார். துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் பி.ஒய். விஜயேந்திரா. அவர் வேறு யாருமல்ல கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன்தான். எடியூரப்பாவுக்கு அடுத்து அவர்தான் என பார்க்கப்படும் விஜயேந்திராவுக்கு துணை தலைவர் கட்சிக்குள் ஒரு பதவி உயர்வாக கருதப்படுகிறது. கட்சியில் 70 வயதை தாண்டியவர்களுக்கு எந்த தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது
 

கர்நாடக பிரிவு பா.ஜ.க. தலைவர் நலின் குமார் கட்டீல் கடந்த சில தினங்களுக்கு 10 பேரை கட்சியின் துணை தலைவர்களாக நியமனம் செய்தார். துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் பி.ஒய். விஜயேந்திரா. அவர் வேறு யாருமல்ல கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன்தான். எடியூரப்பாவுக்கு அடுத்து அவர்தான் என பார்க்கப்படும் விஜயேந்திராவுக்கு துணை தலைவர் கட்சிக்குள் ஒரு பதவி உயர்வாக கருதப்படுகிறது.

கட்சியில் 70 வயதை தாண்டியவர்களுக்கு எந்த தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது பா.ஜ.க.வின் கொள்கையாக இருக்கிறது. அதேசமயம், பி.எஸ்.எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு பா.ஜ.க. வழங்கியுள்ளது. இருப்பினும், தற்போது அவரது வயது மற்றும் கட்சியின் கொள்கையை கருத்தில் கொண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகும்படி எடியூரப்பாவிடம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியிலிருந்து இறங்குவதற்கு கைமாறாக தனக்கு மாநிலத்தின் கவர்னர் பதவி மற்றும் மகன் விஜயேந்திராவுக்கு முக்கிய பதவியை கட்சி மேலிடத்தில் எடியூரப்பா கேட்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எடியூரப்பாவின் மூத்த மகன் பி.ஒய். ராகேவந்திரா சிவமோகா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநில பா.ஜ.க. துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டது குறித்து விஜயேந்திரா தனது டிவிட்டரில், முத்தவர்களிடமிருந்து வழிகாட்டுதல், காரியகார்த்தங்களின் ஒத்துழைப்பு மக்களிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் எனது வெற்றிக்கான படி கற்களாக மாறும் என பதிவு செய்து இருந்தார்.