×

#Breaking :ஓபிஎஸ் மகன் கார் உடைப்பு

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமானவர் ரவீந்திரநாத்குமார். இவரது காரை போடிநாயக்கனூர் தொகுதி பெருமாள்கவுண்டம்பட்டியில் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கி அடித்து உடைத்துள்ளனர். தமிழகத்திற்கு இரு முதல்வர்களை கொடுத்த நட்சத்திர தொகுதி போடி. தேனி மாவட்டத்தின் இத்தொகுதியில் 1989ல் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அதன்பினர் ஓபிஎஸ் 2011,2016 தேர்தல்களில் வெற்றி பெற்றார். இருமுறை சிறிது காலம் முதல்வராக இருந்தார். தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
 

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமானவர் ரவீந்திரநாத்குமார். இவரது காரை போடிநாயக்கனூர் தொகுதி பெருமாள்கவுண்டம்பட்டியில் 20க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கி அடித்து உடைத்துள்ளனர்.

தமிழகத்திற்கு இரு முதல்வர்களை கொடுத்த நட்சத்திர தொகுதி போடி. தேனி மாவட்டத்தின் இத்தொகுதியில் 1989ல் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் ஆனார். அதன்பினர் ஓபிஎஸ் 2011,2016 தேர்தல்களில் வெற்றி பெற்றார். இருமுறை சிறிது காலம் முதல்வராக இருந்தார். தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த சட்டமன்ற தேர்தலிலும் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவரை எதிர்த்து அதிமுகவில் இருந்து அமமுக சென்று அங்கிருந்து திமுக சென்ற தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

இதனால் இருவருக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியின் பெருமாள்கவுண்டம்பட்டியில் ரவீந்திரநாத்குமாரின் கார் உடைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துணைமுதல்வரின் மகன் கார் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 20 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுகதான் அடுத்து ஆட்சிக்கு வருகிறது என்கிற நம்பிக்கையில் இருக்கும் ஸ்டாலின், ஓபிஎஸ்சை தோற்கடித்துவிட்டால் அமைச்சர் பதவி தரப்படும், தோற்றாலும் எம்.பி. பதவி தரப்படும் என்று உறுதி அளித்ததால், தொகுதியில் இறங்கி அடித்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதனால்தான் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையிலும், கட்சிக்காகவும் தந்தையின் வெற்றிக்காகவும் தொகுதியில் வலம் வந்துகொண்டிருந்த ரவீந்திரநாத் குமாரின் காரினை, தோல்வி பயத்தில் திமுகவினர் அடித்து நொறுக்கியுள்ளனர் என்று தகவல்.