×

கேரளாவில் கழகக்கூட்டம் தொகுதியில் அமைச்சருக்கு எதிராக அவரது மனைவியை களமிறக்கிய பா.ஜ.க.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கழக்கூட்டம் தொகுதியில் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை எதிர்த்து அவரின் மனைவி ஷோபா சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது. கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடக்கம்பள்ளி சுரேந்திரனும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் எஸ்.எஸ். லாலும் போட்டியிடுகின்றனர். கழக்கூட்டம் தொகுதியில் கடக்கம்பள்ளி சுரேந்திரன்
 

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கழக்கூட்டம் தொகுதியில் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனை எதிர்த்து அவரின் மனைவி ஷோபா சுரேந்திரனை களம் இறக்கியுள்ளது.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடக்கம்பள்ளி சுரேந்திரனும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் எஸ்.எஸ். லாலும் போட்டியிடுகின்றனர்.

கடக்கம்பள்ளி சுரேந்திரன்

கழக்கூட்டம் தொகுதியில் கடக்கம்பள்ளி சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்போதும், எஸ்.எஸ். லால் வேட்பாளராக அறிவிப்பு வெளியானபோதும் அந்த தொகுதியில் எந்தவிதமான பரபரப்பு ஏற்படவில்லை. அந்த தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் அந்த தொகுதி மட்டுமல்ல அந்த மாநிலமே பரபரப்பானது. ஏனென்றால் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு எதிராக அவரது மனைவி ஷோபா சுரேந்திரனை வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தியது. ஷோபா சுரேந்திரன் கேரள பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார்.

ஷோபா சுரேந்திரன்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இந்தத் தொகுதியில் தனது வாக்கு வங்கியை 25 சதவீதமாக உயர்த்தியது. கேரளாவில் சபரிமலை விவகாரம் எழுந்தபோது, பாஜக மாநில துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன் செய்த போராட்டங்கள், பிரச்சாரங்கள் போன்றவை மக்கள் மத்தியில் ஆழமாக கட்சியை எடுத்துச் சென்றுள்ளன. பாஜக செல்வாக்கு பெற்று திகழும் தொகுதிகளில் இப்போது கழக்கூட்டமும் ஒன்றாக மாறியுள்ளது. கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு எதிராக அவரின் மனைவி ஷோபா சுரேந்திரனை பாஜக களமிறக்கியுள்ளதால், கழக்கூட்டம் தொகுதியில் எந்தவொரு கட்சியும் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.