×

‘அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை எதிர்த்து பாஜக போட்டியிடும்’ : அண்ணாமலை சூசகம் !

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்றால் நேரிடையாக போட்டியிடும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 21ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணியை
 

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்றால் நேரிடையாக போட்டியிடும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 21ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இருப்பினும் தொகுதி பங்கீடு போன்றவற்றைப் பற்றி இன்னும் உறுதியாக அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக நேரடியாக போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பழனி தொகுதியை நிச்சயம் பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள் என அண்ணாமலை கூறிய நிலையில் இன்று அரவக்குறிச்சி தொகுதியை பஅதிமுக தங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை சூசகமாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.