×

பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் கைது!

திருமாவளவனுக்கு எதிராக நடக்கவிருந்த போரட்டத்தில் பங்கேற்க சென்ற கே.டி ராகவனை மதுராந்தகம் அருகே போலீசார் கைது செய்தனர். விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டத்தது. அதே போல பாஜகவுக்கு எதிராக விசிகவினரும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி சிதம்பரத்தில் கூடிய பாஜகவினர் மற்றும் விசிகவினரை கடலூர் போலீசார் கைது செய்தனர். அசம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்
 

திருமாவளவனுக்கு எதிராக நடக்கவிருந்த போரட்டத்தில் பங்கேற்க சென்ற கே.டி ராகவனை மதுராந்தகம் அருகே போலீசார் கைது செய்தனர்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டத்தது. அதே போல பாஜகவுக்கு எதிராக விசிகவினரும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி சிதம்பரத்தில் கூடிய பாஜகவினர் மற்றும் விசிகவினரை கடலூர் போலீசார் கைது செய்தனர். அசம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சிதம்பரத்தில் நடக்கவிருந்த போராட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச் சாவடியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்து, போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர்.