×

காங்கிரஸ் முதல்வர்களே உங்க பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில்லை… சோனியா காந்தியை தாக்கிய பா.ஜ..க. தலைவர்

பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் ஆன்லைன் பொதுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று உத்தர பிரதேசத்தில் நடந்த ஆன்லைன் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி பிரதமர் நரேநதிர மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக தாக்கி பேசினார். ஜே.பி. நட்டா பேசியதாவது: நாம் பெட்ரோல் விலைகளை உயர்த்தியதாக
 

பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் ஆன்லைன் பொதுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று உத்தர பிரதேசத்தில் நடந்த ஆன்லைன் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி பிரதமர் நரேநதிர மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக தாக்கி பேசினார்.

ஜே.பி. நட்டா பேசியதாவது: நாம் பெட்ரோல் விலைகளை உயர்த்தியதாக சோனியா காந்தி கூறுகிறார். பெட்ரோல் விலை உயர்வுகளை திரும்ப பெறக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் முதல்வர்களிடம் பெட்ரோல் விலையை குறைக்கும்படி அவர் கேட்கவில்லை. இதுதான் அரசியல் வழியா?. உங்க முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் பெட்ரோல் விலையை உயர்த்தினர், அவர்கள் உங்க ஆலோசனையை பின்பற்றவில்லை. நீங்க பிரதமருக்கு கடிதம் எழுதுகிறீர்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் முன்னேற்றத்துக்கான செயல்திட்டம் தயாராக உள்ளது, உங்க செயல்திட்டம் குறித்து நீங்க கவலைபடுங்க என காங்கிரஸ் கட்சிக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவாகள் ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கி செல்கிறார்கள். எதிர்கட்சியின் பொறுப்பு என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றால் எங்களிடமிருந்து கற்று கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.