×

வளர்ச்சி குறித்து ஓவைசி சகோதரர்கள் பேசுவது சிரிப்புக்குரியது… பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா தாக்கு

வளர்ச்சி குறித்து அக்பருதீன் மற்றும் அசாதுதீன் ஓவைசி பேசுவது நகைப்புக்குரியது என்று பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். தெலங்கானாவின் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஹைதராபாத் சென்ற பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
 

வளர்ச்சி குறித்து அக்பருதீன் மற்றும் அசாதுதீன் ஓவைசி பேசுவது நகைப்புக்குரியது என்று பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.

தெலங்கானாவின் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஹைதராபாத் சென்ற பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

தேஜஸ்வி சூர்யா

வளர்ச்சி குறித்து அக்பருதீன் மற்றும் அசாதுதீன் ஓவைசி பேசுவது நகைப்புக்குரியது. அவர்கள் வளர்ச்சி மற்றும் புதிய அடிப்படைகட்டமைப்பு திட்டங்களை பழைய ஹைதராபாத்தில் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்களது அனுமதித்த ஒரே விஷயம் ரோஹிங்கிய முஸ்லிம்கள். வளர்ச்சி குறித்து பேச அவர்களுக்கு உரிமை கிடையாது. ஓவைசிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவுக்கு எதிராக வாக்களிப்பதாகும்.

மோடி, கே சந்திரசேகர் ராவ்

அவர் (அசாதுதீன் ஓவைசி) தீவிர இஸ்லாமியம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தின் மொழியில் பேசுகிறார். இதைத்தான் முகமது அலி ஜின்னாவும் பேசிக் கொண்டிருந்தது. ஓவைசி சகோதரர்களின் பிரிவினை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் நிற்க வேண்டும். தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாகத்துக்கும், முதல்வர் கே சந்திரசேகர் ராவின் பண்ணைவீட்டு நிர்வாகத்துக்கும் இடையேதான் இன்று யுத்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.