×

பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட்டில் எதற்கு பா.ஜ.க உறுப்பினர்? – வலுக்கும் எதிர்ப்பு

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் கனகசபாபதியை கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க-வினர் நியமிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிது. தமிழகத்தைச் சேராத ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக நியமிக்க அனுமதித்ததால் தமிழக அரசு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதலமைச்சரின் மதிப்பை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்த அரியர் தேர்வுக்கு விண்ணபிப்பித்தவர்களும் பாஸ் திட்டத்தைத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இந்த
 


தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் கனகசபாபதியை கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க-வினர் நியமிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிது. தமிழகத்தைச் சேராத ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக நியமிக்க அனுமதித்ததால் தமிழக அரசு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.


முதலமைச்சரின் மதிப்பை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்த அரியர் தேர்வுக்கு விண்ணபிப்பித்தவர்களும் பாஸ் திட்டத்தைத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட்டில் கல்வியாளர்களை புறக்கணித்துவிட்டு பா.ஜ.க

நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கல்வியில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை புகுத்த இதுபோன்ற நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் பணத்தில் ஊதியம் பெறும் ஆளுநர், மக்களுக்கு பணியாற்றாமல் பா.ஜ.க-வுக்கு பல்லக்கு தூக்குவது சரியா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உள்ளது. கல்வி வல்லுநர்களை நியமிக்க இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவரை நியமிக்க அல்ல. அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்ததன் மூலம் தவறான முன் உதாரணத்தை ஆளுநர் ஏற்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகக் கல்வியைக் காவிமயமாக்க – ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க, அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்துள்ள ஆளுநர் அவர்கள் இறங்கி வந்திருப்பது ஏன்? இந்த நடவடிக்கை; சட்டம், வேந்தருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் – சட்டமன்ற ஜனநாயகம், ஆளுநர் மீது வைத்த நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது. உடனடியாக கனகசபாபதி நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர், தமிழக முதல்வர் இதற்கான அழுத்தத்தைத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.