×

"கெஜ்ரிவால் தி ரியல் கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டர்" - வன்மத்தை கக்கிய பாஜக! 

 

சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட்டாக டிரெண்ட்டாகும் வார்த்தை வன்மம். வன்மம் என்பது தீராப்பகையோடு ஒருவர் மீது வெறுப்பான வார்த்தையை உமிழ்வது தான். நெட்டிசன்கள் பாஷையில் சொன்னால் வார்த்தைகளைக் கக்குவது. தற்போது அதைத் தான் கக்கியுள்ளது பாஜக. எப்போதுமே வன்ம ஸ்பெஷலிஸ்ட் என்றால் அதில் பாஜக தலைவர்கள் தான் டாப்பில் இருப்பார்கள். தற்போது அவர்கள் கூறியிருப்பது அல்ட்ரா லெவல் வன்மம். எத்தனை நாள் வன்மமோ தெரியவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலும் மம்தா பானர்ஜியும் இந்த மாநிலங்களுக்கு அடிக்கடி விசிட் அடிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டேராடூன் நகரில் நேற்று நடந்த நவ் பரிவர்த்தன் யாத்ராவில் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டார்.

இச்சூழலில் இன்று அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டரில் கூறியிருக்கிறார். அவர் இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் கெஜ்ரிவால் பாதிக்கப்பட்டதால் காணொலி மூலமே கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று வந்துவிட்டால், அவர் நம் பகைவராகவும் இருந்தால் நாம் "உனக்கு ஆவனும்டா" என சொல்வாமோ? மனிதாபிமானம் என ஒன்று இருந்தால் நாம் அப்படி சொல்ல மாட்டோம் தானே.


ஆனால் பாஜகவினர் சொல்வார்கள். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில், "டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவால் சூப்பர் ஸ்பிரெட்டராக மாறிவிட்டார். தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று கெஜ்ரிவால் கொரோனாவை பலருக்கும் பரப்பியுள்ளார். பாட்டியாலா, லக்னோ, கோவாவுக்கு சென்று கொரோனாவை நீங்கள் பரப்பியதற்கு யார் பொறுப்பேற்பது? உண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் சூப்பர் ஸ்பிரெட்டர்” என கூறியுள்ளார். சூப்பர் ஸ்பிரெட்டர் (Super Spreader) என்றால் அதிகமான நபர்களுக்கு கொரோனாவை பரப்புவர் என்று பொருள். எப்படியோ நீண்ட நாள் வன்மத்தைக் கக்கிவிட்டார் கபில் மிஸ்ரா.