×

பிறந்தநாள் கொண்டாட்டம்… குவிந்த வாழ்த்து, உற்சாகத்தில் சபரீசன்! – வாரிசு அரசியலில் அடுத்த மோதல்!

அண்ணன் அழகிரியை வீழ்த்தி மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவர் பதவியைப் பிடித்தார். தற்போது ஸ்டாலின் குடும்பத்தில் யார் அதிகாரம் மிக்கவர் என்ற அரசியல் போட்டி நடந்து வருகிறது. மகனா, மருமகனா என யாரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் ஸ்டாலின் அல்லாடி வருவதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன. உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பு, நடிப்பு என்று பிசியாக இருந்த நேரத்தில் அரசியலில் கால்பதித்தார் சபரீசன். கடந்த சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு இணையாக சபரீசன் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட
 

அண்ணன் அழகிரியை வீழ்த்தி மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவர் பதவியைப் பிடித்தார். தற்போது ஸ்டாலின் குடும்பத்தில் யார் அதிகாரம் மிக்கவர் என்ற அரசியல் போட்டி நடந்து வருகிறது. மகனா, மருமகனா என யாரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் ஸ்டாலின் அல்லாடி வருவதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.
உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பு, நடிப்பு என்று பிசியாக இருந்த நேரத்தில் அரசியலில் கால்பதித்தார் சபரீசன். கடந்த சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு இணையாக சபரீசன் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது.

அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தி.மு.க நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். கட்சியும் வேண்டாம், ஒரு பதவியும் வேண்டாம் என்று கூறி வந்தவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சில நாட்களில் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இதனால், சபரீசனுக்கும் உதயநிதிக்கும் போட்டி என்ற வகையில் செய்திகள் வெளியாகின. அதன்பிறகு சபரீசன் சற்று அடங்கியே உள்ளார்.
இந்த நிலையில் சபேசனின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர். உதயநிதி ஸ்டாலினால் டம்மியாக்கப்பட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். அது மட்டுமின்றி அன்பில் மகேஷ், கௌதம சிகாமணி, வீரபாண்டி டாக்டர் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததில் சபரீசன் உற்சாகத்தில் உள்ளாராம்.


உதயநிதி ஸ்டாலினைத் தாண்டி சபரீசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அது குடும்பத்துக்குள், கட்சிக்குள் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமோ என்று கவலையில் உள்ளனர் தி.மு.க-வினர். இது ஒன்றும் அவர்களுக்கு புதிது இல்லையே… 20, 30 ஆண்டுகளாகவே யார் அடுத்த வாரிசு என்ற சண்டையில் எங்கு சாய்வது என்று தெரியாமல் கடைசியில் ஸ்டாலின் பக்கம் ஒதுங்கியவர்கள்தானே என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.