×

இது எனது கடைசி தேர்தல் என்று சொல்லவில்லை.. கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.. பல்டி அடித்த நிதிஷ்குமார்

இது எனது கடைசி தேர்தல் என்று நான் சொல்லவே இல்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று புது விளக்கம் கொடுத்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். பீகாரில் 3ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பேசுகையில், இதுதான் என்னுடைய கடைசி தேர்தல். ஆகையால் வாக்காளர்கள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு வாக்களியுங்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் வெற்றியை உறுதி
 

இது எனது கடைசி தேர்தல் என்று நான் சொல்லவே இல்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று புது விளக்கம் கொடுத்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

பீகாரில் 3ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பேசுகையில், இதுதான் என்னுடைய கடைசி தேர்தல். ஆகையால் வாக்காளர்கள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு வாக்களியுங்கள். ஐக்கிய ஜனதா தள கட்சியின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

நிதிஷ் குமார், மோடி

தற்போது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 125 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பலத்ததுடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நேற்றுதான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த கூட்டத்தில் நான் ஒய்வு குறித்து பேசவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் கடைசி பேரணியில் அனைத்து நன்றாக உள்ளதால் நன்றாக முடிகிறது என்று எப்போதும் சொல்கிறேன்.

நிதிஷ் குமார்

நீங்கள் பேச்சை முன்னும், பின்னும் கேட்டால் அனைத்தும் தெளிவாக இருக்கும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இதே அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன். நான் எந்த கோரிக்கையும் (முதல்வர் தேர்வு) வைக்கவில்லை. நாளை (இன்று) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் நடைபெறும் முறைசார சந்திப்புக்கு பிறகு பதவியேற்பு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.