×

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரசி மற்றும் கொஞ்சம் பணமும் காங்கிரசின் மாணவரணி அனுப்பியது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவாக உள்ளது. சத்தீஸ்கர் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவருமான பூபேஷ் பாகல், அடக்குமுறைக்கு விவசாயிகள் பயப்படமாட்டார்கள் என்று
 

டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரசி மற்றும் கொஞ்சம் பணமும் காங்கிரசின் மாணவரணி அனுப்பியது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவாக உள்ளது. சத்தீஸ்கர் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவருமான பூபேஷ் பாகல், அடக்குமுறைக்கு விவசாயிகள் பயப்படமாட்டார்கள் என்று பா.ஜ.க.வை எச்சரிக்கை செய்துள்ளார்.

பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இது தொடர்பாக கூறியதாவது: ஒரு எதிர்ப்பு இருக்கும் போதெல்லாம், அதை பா.ஜ.க. கேவலப்படுத்த முயற்சி செய்கிறது. பா.ஜ.க.வினரை பொறுத்தவரை விவசாயிகளை சில நேரங்களில் பாகிஸ்தானி மற்றும் காலிஸ்தானி என்று அழைத்தனர். விவசாயிகள் இடைத்தரகர்களின் தரகர்கள் என்று கூட அவர்கள் (பா.ஜ.க.வினர்) குற்றம் சாட்டினர். அடக்குவதற்கான அவர்களின் முயற்சியை பொருட்படுத்தமாட்டார்கள், விவசாயிகள் பயப்படமாட்டார்கள்.

இந்திய தேசிய மாணவர்கள் சங்கம்

தங்களது போராட்டங்களுக்கு ஆதரவளித்தவர்களை மத்திய அரசு துன்புறுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவளித்த பலர் தேசிய புலனாய்வு அமைப்பிடமிருந்து நோட்டீஸ் பெற்றுள்ளனர். காங்கிரசின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர்கள் சங்கம், டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு 53 டன் அரசியும், ரூ.68 ஆயிரம் ரொக்கமும் அனுப்பியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.