×

கிசான் திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கு தடை! – அரசு உத்தரவு

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000 என மூன்று தவணைகளில் ரூ.6000ம் செலுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட விவசாயிகள் பெயரில் இந்த பணம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 15 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதும் மாநில அளவில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த பணத்தை மீட்கும்
 

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000 என மூன்று தவணைகளில் ரூ.6000ம் செலுத்தும் திட்டத்தில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட விவசாயிகள் பெயரில் இந்த பணம் செலுத்தப்பட்டது

அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 15 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதும் மாநில அளவில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த பணத்தை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. 80 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரையில் கிசான் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார்

நாமக்கல் மாவட்டத்துக்கும், நாமக்கல் மாவட்ட அதிகாரி நாச்சி முத்து விழுப்புரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் எஸ்.வேல்விழி பெரம்பலூர் மாவட்டத்துக்கும், பெரம்பலூரில் பணியாற்றிய அதிகாரி கடலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.