×

நேற்று அம்மா உணவகம்; இன்று அம்மா கிளினிக் : எஸ்.பி. வேலுமணி கண்டனம்!

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா மினி கிளினிக்கும் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் அவர்கள் சேதம் சேதப்படுத்தினர். இது குறித்து ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. அத்துடன் இது
 

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா மினி கிளினிக்கும் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் அவர்கள் சேதம் சேதப்படுத்தினர். இது குறித்து ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. அத்துடன் இது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட இருவரை கட்சியை விட்டு நீக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு கிராமத்தில், ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா மினி கிளினிக் மர்ம நபர்களால் சேதப்படுத்தபட்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVID19 பேரிடர் காலத்தில் எளிய மக்களுக்கும் சிறந்த மருத்துவம் உடனடியாக கிடைக்க வேண்டும் எனும் உன்னத நோக்கோடு துவங்கப்பட்ட #AmmaMiniClinic நாகை மாவட்டம் அவரிக்காட்டில் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.