×

#TNElections2021 இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு ; பலத்த பாதுகாப்பு!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்தமிழகம், புதுச்சேரி, மற்றும் கேரளா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனால் இன்று காலை முதல் மாலை 7 மணி வரை வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23
 

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்தமிழகம், புதுச்சேரி, மற்றும் கேரளா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனால் இன்று காலை முதல் மாலை 7 மணி வரை வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651. பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர். அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 192 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.அத்துடன் இந்த தேர்தல் களத்தில் சுமார் 3998 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

அத்துடன் விவிபேட் எனப்படும் ஓட்டு எந்திரங்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 165 வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் நான்கு லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ள நிலையில் வாக்குச்சாவடியின் பாதுகாப்பிற்காக காவல்துறை மற்றும் மற்ற படை வீரர்கள் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பணியில் உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அத்துடன் 10 ஆயிரத்து 213 பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பேரிடர் காலம் என்பதால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடலில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்பு பாதுகாப்பு கவச உடை அணிவிக்கப்பட்டு அவர்கள் வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.