×

ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமரை தரிசிக்க இலவசமாக அழைத்து செல்வோம்.. உத்தரகாண்ட் மக்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி

 

உத்தரகாண்டில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்போது, அயோத்தியில் ராமரை இலவசமாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்துவோம் என்று அம்மாநில மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தற்போது டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனது தடத்தை விரிவுப்படுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது செல்வாக்கு அதிகரித்து வருகிறது. உத்தரகாண்டிலும் ஆம் ஆத்மி கட்சி தனது பலத்தை விரும்புகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக அடிக்கடி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்ட் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்ட் பயணம் மேற்கொண்டார். அங்கு உத்தரகாண்ட் மக்களை கவரும் வகையில் டெல்லியை போலவே இங்கும் புனித யாத்திரை திட்டத்தை தொடங்குவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். ஹரித்வாரில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

உத்தரகாண்டில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்போது, டெல்லியை போலவே இங்கும் புனித யாத்திரை திட்ட திட்டத்தை தொடங்குவோம். அயோத்தியில் ராமரை இலவசமாக தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்துவோம். முஸ்லிம்களுககு அஜ்மீர் ஷெரீப் மற்றும் சீக்கியர்களுக்கு கர்தார் சாஹிப் செல்வதற்கான ஏற்பாடுகள் எங்களிடம் இருக்கும். இது இலவசம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.