×

ஜி.என்.சி.டி.டி. மசோதா நிறைவேற்றம்.. தோற்றவர்கள் டெல்லியை நடத்த அதிகாரங்களை வழங்குகிறது.. கெஜ்ரிவால்

தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை, தோற்றவர்கள் டெல்லியை நடத்த அதிகாரங்களை வழங்குகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிசான் ரெட்டி கடந்த வாரம் திங்கட்கிழமையன்று மக்களவையில் தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) மசோதா 2021ஐ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டால் இந்த மசோதா சட்டமாகி விடும். இந்த மசோதாவில் துணைநிலை கவர்னருக்கு
 

தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை, தோற்றவர்கள் டெல்லியை நடத்த அதிகாரங்களை வழங்குகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிசான் ரெட்டி கடந்த வாரம் திங்கட்கிழமையன்று மக்களவையில் தேசிய தலைநகர் டெல்லி (திருத்தம்) மசோதா 2021ஐ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டால் இந்த மசோதா சட்டமாகி விடும்.

நாடாளுமன்றம்

இந்த மசோதாவில் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு அல்லது நிறைவேற்றவதற்கு முன் துணைநிலை கவர்னரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே மேற்கொள்ள முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில், மக்களவையில் இன்று (நேற்று) ஜி.என்.சி.டி.டி. மசோதா நிறைவேற்றப்படுவது டெல்லி மக்களை அவமதிப்பதாகும். இந்த மசோதா மக்களால் வாக்களிக்கப்பட்டவர்களிடமிருந்து அதிகாரங்களை பறிக்கிறது மற்றும் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கு டெல்லியை நடத்துவதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. பா.ஜ.க. மக்களை ஏமாற்றியுள்ளது என்று பதிவு செய்து இருந்தார்.