×

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு முயற்சி.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதிய மசோதா வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு முயற்சி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்தம்) மசோதா 2021ஐ மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல். இந்த புதிய மசோதா, டெல்லி அமைச்சரவை மற்றும் துணைநிலை கவர்னரின் பங்கை சிறப்பாக வரையறுக்க உதவும். தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த மசோதாவில் துணைநிலை கவர்னருக்கு
 

புதிய மசோதா வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு முயற்சி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்தம்) மசோதா 2021ஐ மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல். இந்த புதிய மசோதா, டெல்லி அமைச்சரவை மற்றும் துணைநிலை கவர்னரின் பங்கை சிறப்பாக வரையறுக்க உதவும். தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த மசோதாவில் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தன.

அமித் ஷா

டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டிவிட்டரில், டெல்லி மக்களால் (8 சட்டப்பேரவை தொகுதிகள், மாநகராட்சி தேர்தல்களில் தோல்வி) நிராகரிக்கப்பட்ட பின்னர், இன்று மக்களவையில் மசோதா வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை குறைக்க முயல்கிறது.

பா.ஜ.க.

அரசியலமைப்பு அமர்வு தீா்வுக்கு முரணானது இந்த மசோதா. பாஜகவின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று பதிவு செய்து உள்ளார். தற்போது புதிய மசோதா விவகாரம் மத்திய அரசுக்கும், டெல்லி யூனியன் பிரதேசத்துக்கும் இடையிலான மோதலை புதுப்பித்துள்ளது.