×

ஈபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்து என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் எனக்கு சந்தோசம்- ஆறுக்குட்டி

 

ஒற்றை தலைமை என்ற  அதிமுக வட்டாரத்தின் அனல் பறக்கும் அரசியல் களத்தில் பனிப்போரில் யார் தலைமையை வெல்வார்கள் என்று கேள்வி எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் முன்னாள் அதிமுக எம் எல் ஏ ஆறுகுட்டி கோயமுத்தூர் விளாங்குறிச்சி வீட்டில் பத்திரிக்கையாளர்களை அவசரமாக சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும். சசிகலா, தினகரனுடன் எனக்கு எவ்வித  தொடர்புமில்லை.இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோசம்.இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன்  வந்துவிட்டது.அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள். போகவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கூட என்ன அழைத்தார் ஆனால் நான் செல்லவில்லை.அதிமுகவிற்கு எதிராக செயல்படவில்லை.ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது.எம் ஜி ஆர், அம்மா ஜெயலலிதாவுக்காகவே அதிமுகவில் இருக்கின்றேன். ஓ.பி்.எஸ்,ஈ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை. அதிமுக கட்சி பிளவுபட ஓ பி எஸ் - ஈ பி எஸ் காரணம் என்ற ஆறுகுட்டி பாஜக வளர இவர்களும் காரணம்.

அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன்.உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர்.தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர்.உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது.” எனக் கூறினார்.