தாராபுரத்தை தவெகவுக்கு விட்டுக்கொடுக்கும் அதிமுக, திமுக
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக, அதிமுக, திமுக உட்பட 5 முனை போட்டி ஏற்பட்டதாக அனைவரும் நினைக்கின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தவெக, அதிமுக, திமுக உட்பட 5 முனை போட்டி ஏற்பட்டதாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அதிமுக தாராபுரம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. ஆனால் மதுராந்தகம் தொகுதியில் இதுவரை பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. அங்கு பெயர் அளவுக்கு மட்டுமே அதிமுகவினர் வேலை செய்து வருகின்றனர். தாராபுரத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் வகையில், அதை குறி வைத்து மட்டுமே அதிமுக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது . இது போக அருந்ததியர் மற்றும் முதலியார் போன்ற பிற சமூக வாக்குகளையும் கொஞ்சம் வாங்கினால் அமோக வெற்றி பெறலாம் என்று நினைக்கிறது . அதேபோல திமுகவும் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால் தாராபுரம் தொகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு திமுக பிரச்சாரம் இல்லை. இது ஏதோ சொல்லி வைத்தார் போல உள்ளது. இந்த இரண்டு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டிய பொறுப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு உள்ளது. அதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் நாலாபுரமும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டி கடுமையாக உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டால் மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்