×

"அடுத்த அஞ்சு நாளைக்கு திமுகவோட மேஜிக் ஆட்டம் தான்" - அண்ணாமலை பகீர் பேச்சு!

 

தமிழ்நாட்டில் விடுபட்ட செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் படுபயங்கரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் புனித தோமையர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அடுத்த 5 நாட்களுக்கு திமுகவினர் மேஜிக் அரசியல் செய்வார்கள். 

பொய் குற்றச்சாட்டுகளை அவிழ்த்துவிட்டு மேஜிக் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். சாப்பாட்டை ஆக்க பொறுத்தவன், ஆற பொருக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு,  நுணுக்கமான அரசியல் செய்து வேட்பாளர்களை பற்றிய புரிதலை மக்களிடையே ஏற்படுத்தி, வெற்றி வாகை சூட வழிவகை செய்யவேண்டும். தற்போதுள்ள அரசியல் கர்மவீரர் காமராஜருடைய அரசியலுக்கு நேர் அரசியலாக நடந்து கொண்டிருக்கிறது. 

அதற்கு உதரணமாக 2,000 போலீசார் பாதுகாப்புடன், 40 கார்கள் பின் தொடர, இரண்டு லட்சம் ரூபாய் சைக்கிளில் பயணம் செய்யும் அரசியல் நடக்கிறது. பண பலம் படை பலம் கொண்ட திமுகவுக்கு, வாக்களிப்பதை மறக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் 80% பஞ்சாயத்து மூலமாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக வரக்கூடியதை முறையாக கொடுக்க எங்களால் மட்டுமே முடியும்” என்றார். முன்னதாக ஒரு பிரச்சாரத்தின்போது முதல்வர் ஸ்டாலினை யாரோ பின்னால் இருந்து இயக்குவதால் தான் அவர் ஆபத்தானவர் என தான் கருதுவதாக அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.