×

அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருமாவளவன்

தமிழகத்தில் 6 முறை முதல்வராக அரியணை ஏறிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. சீர்திருத்த திருமணம், இருமொழிக் கொள்கை என அவர் செய்த வரலாற்று நிகழ்வுகள் இன்றளவும் பேசப்படுகிறது. இன்று அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுகவினரும் அதிமுகவினரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அண்ணா புகழை நினைவு கூறும் விதமாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா
 

தமிழகத்தில் 6 முறை முதல்வராக அரியணை ஏறிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. சீர்திருத்த திருமணம், இருமொழிக் கொள்கை என அவர் செய்த வரலாற்று நிகழ்வுகள் இன்றளவும் பேசப்படுகிறது. இன்று அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுகவினரும் அதிமுகவினரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அண்ணா புகழை நினைவு கூறும் விதமாக அரசியல் தலைவர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்திய அளவில் திசை வழியை காட்டியுள்ளது என்றும் பழைமை வாதத்திலிருந்து புரட்சிகரமான அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்த மகத்தான தலைவர் அவர் என்றும் திருமளவன் புகழாரம் சூட்டியுள்ளார்.