×

‘டிடிவி தினகரனை முதல்வராக்குவோம்’ : அமமுக தீர்மானம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணியில் அதிரடியாக களமிறங்கி இருக்கிறது அமமுக. சென்னை வந்த பிறகு மௌனம் சாதித்த சசிகலா, நேற்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பேசிய சசிகலா, அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் பக்கம் வர வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தான், அமமுக துணை தலைவர் அன்பழகன் தலைமையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அமமுகவின்
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணியில் அதிரடியாக களமிறங்கி இருக்கிறது அமமுக. சென்னை வந்த பிறகு மௌனம் சாதித்த சசிகலா, நேற்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பேசிய சசிகலா, அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் பக்கம் வர வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தான், அமமுக துணை தலைவர் அன்பழகன் தலைமையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது. 10 இடங்களில் காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

அதில், அதிமுகவை மீட்டெடுக்கவும் அயராது உழைக்க வேண்டும், பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைப்போம், தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுக்க பொதுச்செயலாளர் தினகரனுக்கு முழு அதிகாரம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அண்மையில், அமமுக வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை இரட்டைத் தலைமையிடம் இருந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.