×

அனல் பறக்கும் அரசியல் களம்: அமித்ஷா, ஜே.பி.நட்டா மீண்டும் தமிழகம் வருகை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 3ஆவது அணியாக களமிறங்கியிருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தில் வேட்பாளர் நேர்காணலிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். முதன் முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலினுக்கு, இந்த தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானது. அதே போல, தேர்தலில் களமிறங்காமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் எடப்பாடிக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது
 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 3ஆவது அணியாக களமிறங்கியிருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தில் வேட்பாளர் நேர்காணலிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

முதன் முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலினுக்கு, இந்த தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானது. அதே போல, தேர்தலில் களமிறங்காமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் எடப்பாடிக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். வெற்றி பெறாவிட்டால், அதிமுகவை சசிகலாவிடம் தாரை வார்க்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு, அதிமுக மத்திய பாஜக அரசின் உதவியுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவ்வப்போது தமிழகம் வரும் பாஜக தலைவர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் அமித்ஷா அதிரடியாக பரப்புரை மேற்கொண்டார். அதே போல சில தினங்களுக்கு முன், தமிழகம் வந்த மோடி திமுக ஆட்சியை வீழ்த்திக் காட்டுவோம் என சூளுரைத்தார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் மீண்டும் தமிழகத்துக்கு வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மார்ச் 7ம் தேதி அமித்ஷாவும், மார்ச் 10ஆம் தேதி ஜே.பி நட்டாவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.