ஆங்கிலேயர்களை போல் மக்களை மிரட்டி, கொன்று ஆட்சி செய்ய இன்று பா.ஜ.க. விரும்புகிறது... அகிலேஷ் யாதவ்
ஆங்கிலேயர்களை போல் மக்களை மிரட்டி, கொன்று ஆட்சி செய்ய இன்று பா.ஜ.க. விரும்புகிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தொப்பியின் நிறம் குறித்து கேள்வி இல்லை, ஆனால் பணவீக்கம்,வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பா.ஜ.க. விரும்புகிறதா? உத்தர பிரதேசத்தை நேபாளத்துடன் இணைக்கும் சாலையை இரட்டை எஞ்சினுடன் அரசாங்கம் எப்போது உருவாக்கும்?.
ஆங்கிலேயர்களை போல் மக்களை மிரட்டி, கொன்று ஆட்சி செய்ய இன்று பா.ஜ.க. விரும்புகிறது. இனி வரும் காலங்களில் பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் செயல்படுவார்கள். இப்போதெல்லாம் முதல்வர் டேப்லெட், ஸ்மார்ட்போன் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார். எந்த டேப்லெட்? நான்கரை ஆண்டுகளாக நீங்கள் (பா.ஜ.க. அரசு) கொடுத்தீர்களா? இது பாரபட்சமான அரசு. அம்பேத்கரியர்களும், சோசலிஸ்டுகளும் ஒன்றாக அமர்ந்தால், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஒழிக்கப்படுவது உறுதி.
உத்தர பிரதேசத்தில் இது போன்ற பல சம்பவங்கள் கேள்விக்குரியாக உள்ளன. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அரசு அமைத்தால், கேள்வித்தாள்கள் லீக்கான அனைத்து தேர்வுகளையும் நடத்துவதற்கான பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும். மேலும் வழங்கப்படாத அனைத்து வேலைகளையும் அரசு வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.