×

அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக வளர்மதி நியமனம்

அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதியும், இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வளர்மதி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த வைகைச்செல்வன் இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு
 

அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதியும், இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வளர்மதி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த வைகைச்செல்வன் இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு மகளிரணி செயலாளர் பொறுப்பு மரகதம் குமரவேலுக்கும், வர்த்தக அணி செயலாளர்களாக வெங்கட்ராமன் மற்றும் ஆனந்தராஜா ஆகிய இருவரும் பதவியிலும் நியமிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.