×

‘மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது’ : நமது அம்மா நாளிதழ் பதிலடி!

வேல் யாத்திரை குறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் கருத்துக்கு அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது. தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் பாஜகவினர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினர். இதனால் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் நாளை ( 17 ஆம் தேதி) மீண்டும் வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவின்
 

வேல் யாத்திரை குறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் கருத்துக்கு அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் பாஜகவினர் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினர். இதனால் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் கைதாகி விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் நாளை ( 17 ஆம் தேதி) மீண்டும் வேல் யாத்திரை நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவின் வானதி சீனிவாசன், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர் விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழில், ‘மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது என்பதை யாத்திரை செல்வோர் உணரவேண்டும். சாதி மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்ட யாத்திரை ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமை ஒருமைப்பாட்டை உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி” என்று குறிப்பிட்டுள்ளது.