×

ஆ.ராசா உருவபொம்மையை செருப்பால் அடித்த அதிமுகவினர்… ஆதரவு தெரிவித்த பாமக!

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக எம்.பி ஆ.ராசா கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கூறியிருந்தார். இது அரசியல் ரீதியான ஒப்பீடு, தனிமனித தாக்குதல் இல்லை என்றும் ஆ ராசா சொல்லியிருந்தாலும் இணையதளத்தில் இதற்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன்
 

முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக எம்.பி ஆ.ராசா கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கூறியிருந்தார். இது அரசியல் ரீதியான ஒப்பீடு, தனிமனித தாக்குதல் இல்லை என்றும் ஆ ராசா சொல்லியிருந்தாலும் இணையதளத்தில் இதற்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ராசாவை இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்தது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து அதிமுகவினர் கருப்புக் கொடி பேரணி நடத்தினர். ராசாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அவரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும், அவரது தாயார் தவசாயி அம்மாள் அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா பேசியதற்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் ஆ.இராசாவின் அருவருக்கத்தக்க, இழிவான பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆ. இராசாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் முழக்கப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து இடங்களிலும் இந்தப் போராட்டத்தில் பா.ம.கவினர் கலந்து கொள்வார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.