×

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு, கோவையில் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில், அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.ராஜு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கூடி மகிழ்சிகளை
 

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு, கோவையில் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.பி.ராஜு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கூடி மகிழ்சிகளை வெளிப்படுத்தினர்.

கோவை ‌தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் அலுவலகத்திலும் அதிமுக தொண்டர்கள் பலர் உற்சாகமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சவுரிபாளையம் பகுதியில், பேருந்து மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.