×

தேர்தல்கள், பிரச்சினைகள் வரும் போது மோடி அரசுக்கு இதுதான் வேலை… காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு..

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்திக்கு நெருக்கமான உதவியாளரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேலிடம் அமலாக்கத்துறை அவரது வீட்டில் வைத்து 8 மணி நேரம் தீவிர விசாரணை
 

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கிகளில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்திக்கு நெருக்கமான உதவியாளரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது படேலிடம் அமலாக்கத்துறை அவரது வீட்டில் வைத்து 8 மணி நேரம் தீவிர விசாரணை செய்தது.

இதனை தொடர்ந்து அகமது படேல் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் ஒரு பகுப்பாய்வு செய்தால், கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் ஒரு தெளிவான வடிவத்தை காண்பீர்கள். ஒவ்வொரு முறையும் மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை அல்லது அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, ஒரு தனிநபரின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை நிர்வகிப்பதில் மோடி அரசுக்கு மிகப்பெரிய தோல்வி, எந்த அமைப்புகளும் கதை மாற்ற உதவாது. தொற்றுநோய் கொரோனா வைரஸ் மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினை தீர்ப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளை எதிர்த்து போராட மோடி அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. ஆயினும்கூட, எங்கள் மனசாட்சி தெளிவாக உள்ளது. எங்களிடம் மறைக்க ஒன்றும் இல்லை அல்லது அரசாங்கத்தின் தோல்விகளையும் அவற்றின் கடந்தகால ஊழலையும் விமர்ச்சிக்கவும் அம்பலப்படுத்தவம் நாங்கள் பயப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.