×

அ.தி.மு.க.வின் புதிய ‘பஞ்ச்’ டயலாக் – .”நம்மில் ஒருவர்:நமக்கான தலைவர்”

அ.தி.மு.க தொண்டர்களிடையே முதல்வர் எடப்பாடியை முன் வைத்து “நம்மில் ஒருவர்: நமக்கான தலைவர்” என்ற புதிய ‘கோஷம்’ எழுந்துள்ளது.முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, தான் பேசும் மேடைகளில் “என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே..” என்பார்..இந்த வசனத்திற்காகவே காத்திருக்கும் தொண்டர்கள் அதிரடியாக கைகளைத் தட்டி மகிழ்வார்கள். இதே போல் எம்ஜி ஆருக்கும் ஒரு வசனம் உண்டு. “என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே” என்பார். இவருக்குப் பின் வந்த ஜெயலலிதா “மக்களுக்காக நான்..மக்களால் நான்” என்றார்.இந்த
 

அ.தி.மு.க தொண்டர்களிடையே முதல்வர் எடப்பாடியை முன் வைத்து “நம்மில் ஒருவர்: நமக்கான தலைவர்” என்ற புதிய ‘கோஷம்’ எழுந்துள்ளது.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, தான் பேசும் மேடைகளில் “என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே..” என்பார்..இந்த வசனத்திற்காகவே காத்திருக்கும் தொண்டர்கள் அதிரடியாக கைகளைத் தட்டி மகிழ்வார்கள். இதே போல் எம்ஜி ஆருக்கும் ஒரு வசனம் உண்டு. “என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே” என்பார். இவருக்குப் பின் வந்த ஜெயலலிதா “மக்களுக்காக நான்..மக்களால் நான்” என்றார்.இந்த வசனம் ஒட்டு மொத்த மக்கள் கவனத்தையும் ஈர்த்தது.

இதே போல் சமீபத்தைய திமுக அரசியலில் “எல்லோரும் நம்முடன்” என்ற வசனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.விலும் அதே போன்று ஒரு ‘பஞ்ச்’ டயலாக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.”நம்மில் ஒருவர்: நமக்கான தலைவர்” என்ற வசனம்தான் அது. இந்த வசனம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிருத்தி அதிமுக ஐடி ஆய்வுக் குழுவினர் உருவாக்கி உள்ளனர்.


முன்னதாக இ.பி.எஸ்.சுக்கும், .ஓ.பி.எஸ்.சுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அடுத்து இருவரும் ஒன்று சேர்ந்த நிலையில் இந்த வசனம் வெளியிடப் பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் தாங்கள் தயாரிக்கும் சுவரொட்டிகளில் இந்த வசனத்தை சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த வசனத்தை கோஷமாக முழங்கியும் வருகிறார்கள். இதையடுத்து வருகிற தேர்தலுக்கும் .”நம்மில் ஒருவர்: நமக்கான தலைவர்” என்கிற இதே வசனத்தை பயன்படுத்தி வாக்குகள் சேகரிக்கவும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


”முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக எளிய விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நம்மைப் போல சாதாரணமானவர்.எளிமையானவர்.அவர் நீண்ட கால அரசியலுக்கு பிறகே தலைவராக வந்துள்ளார்.கொரோனா உள்பட அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளார்.எனவே அவர் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல.. ஒட்டு மொத்த மக்களுக்குமே அவர்தான் தலைவர் என்ற பொருள் பட இந்த ‘பஞ்ச்’ டயலாக்கை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
– இர. சுபாஸ் சந்திர போஸ்.