×

“ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா கூறினார்”

சசிகலாவை முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி யுவராஜ், “சசிகலாவுடன் கழகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் 3-வது முறையாக அதிமுக ஆட்சியமைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா தெரிவித்தார். திமுகவை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம். சசிகலா தலைமை ஏற்றால் மீண்டும் ஆட்சி மலரும். சசிகலா தலைமையில் அதிமுகவினர் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் திமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல்
 

சசிகலாவை முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி யுவராஜ், “சசிகலாவுடன் கழகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் 3-வது முறையாக அதிமுக ஆட்சியமைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா தெரிவித்தார். திமுகவை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்.

சசிகலா தலைமை ஏற்றால் மீண்டும் ஆட்சி மலரும். சசிகலா தலைமையில் அதிமுகவினர் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் திமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய்விடும், எம்.ஜி.ஆர்., அம்மா உருவாக்கிய அதிமுக மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் பின்னால் 32 ஆண்டுகள் இருந்து கழகத்தையும், பல தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உருவாக்கியவர் சசிகலா” எனக் கூறினார்.

சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகம் வர கார் கொடுத்து உதவியர் யுவராஜ் தான். சசிகலாவுக்கு கார் கொடுத்ததற்காக யுவராஜை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது குறிப்பிடதக்கது.