×

தாக்கப்பட்ட அம்மா உணவகம்…’ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்’!

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டதற்கு ஓபிஎஸ் -ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிய திமுக ஆட்சி அமைய போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே திமுகவினரின் வன்முறையும் அரசியல் அநாகரிகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உலகமே வியந்து நோக்கி எல்லா நாடுகளும் பின்பற்றவேண்டிய கருணைமிகு திட்டம் என்று பாராட்டும் அம்மா உணவகத் திட்டத்தை
 

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டதற்கு ஓபிஎஸ் -ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிய திமுக ஆட்சி அமைய போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே திமுகவினரின் வன்முறையும் அரசியல் அநாகரிகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உலகமே வியந்து நோக்கி எல்லா நாடுகளும் பின்பற்றவேண்டிய கருணைமிகு திட்டம் என்று பாராட்டும் அம்மா உணவகத் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள். சென்னை நகரில் உள்ள அம்மா உணவகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியது என்பதை ஒருபோதும் ஏற்புடையதல்ல. எவரொருவரும் பசிப்பிணியால் வாழக்கூடாது என்று இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம் தான் அம்மா உணவகம். மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த மக்களுக்கான அம்மா உணவகம் திட்டத்தின் சிறப்பை உணர்ந்து இன்றளவும் அண்டை மாநிலங்கள் தொடங்கி ஐந்தாண்டுகள் வரை இந்த திட்டத்தை பின்பற்றி வருகின்றன.

பெருமழை பெரும் வெள்ளம் தொடங்கி பேரிடர் காலங்களில் வரை உணவின்றி தவித்து வரும் பசி பிணி நீக்கி அட்சய பாத்திரம் . அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். மாண்புமிகு அம்மா அவர்களை படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்பவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.