×

“ஓட்டுக்கு காசு கொடுக்க வாக்காளர்களின் பேங்க் புக்கை வாங்கும் அதிமுக”

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி. அருண், ஆர். நீலகண்டன், ஜெ. பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக சில கோரிக்கைகளை முன்வைத்தது. அந்தக் கோரிக்கைகள் தற்போது செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. *அதிமுகவினர்
 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி. அருண், ஆர். நீலகண்டன், ஜெ. பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக சில கோரிக்கைகளை முன்வைத்தது.

அந்தக் கோரிக்கைகள் தற்போது செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

*அதிமுகவினர் சார்பில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

*வருவாய்த் துறை அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டு புகார் கொடுக்க மறுக்கின்றனர். ஆகவே திமுகவினர் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்திட வேண்டும்.

*வாக்காளர்களுக்கு இலவசப் பரிசுப் பொருட்கள் வழங்கும் வகையில் அதிமுகவினர் நடத்தி வரும் நிகழ்ச்சிகளை முழுவதும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அனைத்து வங்கிகளின் பணப் பரிமாற்றத்தை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்காக, ஆளும் கட்சியினரால் வங்கிக் கணக்கு புத்தக நகல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறதா என்பதை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும்.

*வாக்குப் பதிவு முழுவதும் இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும்.
மாவட்டத் தலைநகரங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்ற முடிவினை மாற்றி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.