×

ஸ்டாலினுக்கு மரண பயம் காட்டிய ‘அம்மாவின் தீவிர விசுவாசியை’ கொளத்தூரில் களமிறக்கி எடப்பாடி செக்!

தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள். முன்னாள் அமைச்சர்கள் ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கேபி முனுசாமி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், மா. பாண்டியராஜன், வேலுமணி ஆகியோருக்கு அவர்கள் ஏற்கெனவெ போட்டியிட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில்
 

தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள். முன்னாள் அமைச்சர்கள் ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கேபி முனுசாமி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், மா. பாண்டியராஜன், வேலுமணி ஆகியோருக்கு அவர்கள் ஏற்கெனவெ போட்டியிட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆதி ராஜாராம் என்பவரை அதிமுக களமிறக்கியுள்ளது. தற்போது இவர் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் அமைப்பு செயலாளராகவும் பொறுப்பில் இருக்கிறார்.

2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார். அப்போதே பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார். வெறும் 2, 468 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே ஸ்டாலினிடம் தோல்வியைத் தழுவினார். 1983ஆம் ஆண்டிலிருந்து அம்மாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். 32 வருட கால அரசியலில் தீவிர உழைப்பால் 28 வருடங்கள் பொறுப்பு வகித்திருக்கிறார். எப்போதும் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தவர் என்ற பெருமை ஆதிராஜாராமுக்கு உண்டு.

2006ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பி பதவிக்காக இவரின் பெயரை ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அச்சமயம் வழக்கறிஞர் விஜயனைத் தாக்கிய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டதால் தாமாகவே முன்வந்து அந்தப் பதவியில் போட்டியிடவில்லை என்று கூறினார். ஜெயலலிதாவின் பெயரைக் காப்பாற்ற எம்பி பதவியைத் தூக்கியெறிந்ததால் அவரின் ஆசியைப் பெற்றவராக இருந்தார்.