×

அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சரவையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உத்தரவு
 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

அமைச்சரவையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே.11 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அவையின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான சட்டப்பேரவையில் முன்னவர் பொறுப்பு துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. பேரவையில் ஒவ்வொரு தீர்மானமும் கொண்டுவரப்படும்போது அவை முன்னவர்தான் முன்மொழிவார்.