×

தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா?

 

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்து வருகிறார். முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தொடங்கி அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை த்ரிஷா பங்கேற்றார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா நேரடி அரசியலில் களமிறங்கக் கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றம் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரை அடித்து ஒட்டியிருப்பதும் தவெக தொண்டர்கள்தான். அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் பாணியில் ஜூன் 2025 இல், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ அஷ்டலிங்க அதிசேஷ செல்வா விநாயகர் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ அதிசேஷ வராகி அம்மன் கோயில்களுக்கு நடிகை த்ரிஷா 'கஜா' (Gaja) என்ற பெயரில் எந்திர யானை வழங்கினார். மேலும் சில நேர்காணல்களில் அரசியலில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதனால் தற்போது தமிழக அரசியலில் த்ரிஷாவின் பெயரும் அதிகமாகவே உச்சரிக்கப்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக த்ரிஷா தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய்யும் தன்னுடன் இருந்த பல்வேறு நபர்களுக்கும் அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புகளை அளித்து வருகிறார். இதனால் த்ரிஷாவுக்கும் நிச்சயமாக பொறுப்பு அளிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.