×

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி?!

நடிகை விஜயசாந்தி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்தார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆன இவர் 2014 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் தன்னை
 

நடிகை விஜயசாந்தி விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். பின்னர்   அக்கட்சியிலிருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்தார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆன இவர்  2014 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிகை விஜய சாந்தி பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காங்கிரஸின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணையவிருப்பதாகக் கூறபடுகிறது.