×

அதிமுக பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை – கடம்பூர் ராஜூ எச்சரிக்கை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஆட்சியை திமுகவிடம் பறி கொடுத்து விட்டது. தேர்தலுக்கு முன்னரே ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையில் மோதல் இருந்தது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்டதால் இருவருக்கும் இடையேயான சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை கைபற்ற சசிகலா முயன்று வருகிறார். அவ்வப்போது அதிமுக தொண்டர்களிடம் பேசுவது போல ஆடியோ வெளியிட்டு
 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஆட்சியை திமுகவிடம் பறி கொடுத்து விட்டது. தேர்தலுக்கு முன்னரே ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையில் மோதல் இருந்தது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்டதால் இருவருக்கும் இடையேயான சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை கைபற்ற சசிகலா முயன்று வருகிறார்.

அவ்வப்போது அதிமுக தொண்டர்களிடம் பேசுவது போல ஆடியோ வெளியிட்டு கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவிடம் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அதிமுக பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் எனக் கூறிய சசிகலா, அமமுகவை தேர்தலில் போட்டியிடாமல் தடுத்திருக்க வேண்டும் என்றும் தேர்தலின் போது சசிகலா கோவில் வழிபாடு என்ற பேரில் மறைமுகமாக தேர்தல் பரப்புரை செய்தார் என்றும் தெரிவித்துள்ளார்.