×

2 நிமிடம் பெங்காலியில் பேச முடியுமா? பா.ஜ.க. தலைவர்களுக்கு சவால் விட்ட மம்தாவின் மருமகன்

2 நிமிடம் பெங்காலி பேச முடியுமா? நான் நாட்டின் எந்த பகுதியிலும் இந்தியில் பேச தயார் என்று பா.ஜ.க. தலைவர்களுக்கு மம்தா பானர்ஜியின் மருமகன் சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா பொதுக்கூட்டங்களில் பேசுகையில், வாக்கு வங்கி அரசியலுக்காக, ரோஹிங்கியர்கள் மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும ஊடுருவல்காரர்களுக்கு மம்தா பானர்ஜி அடைக்கலம் கொடுக்கிறார் என குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு மம்தாவின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அலிபுர்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
 

2 நிமிடம் பெங்காலி பேச முடியுமா? நான் நாட்டின் எந்த பகுதியிலும் இந்தியில் பேச தயார் என்று பா.ஜ.க. தலைவர்களுக்கு மம்தா பானர்ஜியின் மருமகன் சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அமித் ஷா பொதுக்கூட்டங்களில் பேசுகையில், வாக்கு வங்கி அரசியலுக்காக, ரோஹிங்கியர்கள் மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும ஊடுருவல்காரர்களுக்கு மம்தா பானர்ஜி அடைக்கலம் கொடுக்கிறார் என குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு மம்தாவின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அலிபுர்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசார நேரத்தில் அமித் ஷா எப்போதும் ஊடுருவல்காரர்கள் குறித்து பேசுகிறார்.

அமித் ஷா

சர்வதேச எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படைதான் இதற்கு பொறுப்பு. இது அமித் ஷாவின் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அப்படியென்றால், மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் இருந்தால் அதற்கு பொறுப்பேற்று அமித் ஷாவும், எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலும்தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியிலிருந்து பல தலைவர்கள் மேற்கு வங்கம் வருகின்றனர்.

பிரதமர் மோடி

இரண்டு நிமிடம் பெங்காலியில் பேச முடியுமா என்று அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். நாட்டின் எந்த பகுதியிலும் இந்தியில் பேச நான் தயார். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்கம் மத்திய அரசுக்கு ரூ.75 ஆயிரம் கோடி அனுப்புகிறது. ஆனால் அவர்கள் அம்பன் புயல் நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி மட்டுமே கொடுத்தார்கள். மோடி ஜிதான் அதனை கொடுத்தார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினர். இது நமது பணம், பா.ஜ.க. தலைவர்களின் அப்பாக்களின் காசு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.