விளக்கின் பின்னால் தாமரை சின்னம்- தனுஷ் பாஜக பக்கம் சாய்கிறாரா?
தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 3,000 பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
பரிசளிக்கப்பட்ட காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விளக்கின் அடிப்பகுதியில் GRT என்ற லோகோவுக்கு அருகில், ஒரு தாமரை பூ போன்ற முத்திரை இருப்பதை சிவப்பு வட்டம் போட்டு காட்டியுள்ளனர். GRT தங்கம், வெள்ளி நகைக்கடை. அவர்கள் வெள்ளி பொருட்களில் BIS Hallmark, 925 Silver Mark போன்ற தர முத்திரைகளை தான் போடுவார்கள். தாமரை பூ போன்ற சின்னம் அவர்களின் வழக்கமான முத்திரை இல்லை. ஆனால் தாமரை என்பது பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சின்னம். என்பதால், அவர் பாஜக போக போகிறாரா? என்ற பேச்சு பரவ ஆரம்பித்துவிட்டது.
சிலர் இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தாமரை சின்னம், தனுஷ் மறைமுகமாக பாஜகவை நோக்கி நகர்கிறார் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அதிமுக தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. அதிமுக தனுஷை குறிவைப்பது பாஜகவின் வியூகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இன்னொரு தரப்பினர் சொல்வது வெள்ளி பொருட்களில் தரத்தை குறிக்க சில நேரங்களில் பூ, தாமரை போன்ற சிறு முத்திரைகளை சில ஜுவல்லரிகள் பயன்படுத்துவது உண்டு. அது பாஜக சின்னம் அல்ல, வெள்ளியின் தர முத்திரை (Silver Purity Mark) என்றும், GRT லோகோவுடன் சேர்ந்து இருக்கும் அந்த முத்திரையை பாஜக சின்னமாக திரித்து பார்க்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இது வரை தனுஷ் தரப்பில் இருந்து இந்த தாமரை முத்திரை குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இப்போது அவர் கொடுத்த பரிசில் தாமரை முத்திரை இருப்பது, அல்லது இது வெறும் வெள்ளி நகை முத்திரையா? அல்லது தனுஷ் பாஜக பக்கம் சாய்கிறாரா? என்ற பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. தனுஷ் விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை தெரியும்.