செந்தில் பாலாஜிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி? 110 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் ரெடி!
திமுகவில் 77 மாவட்டங்களாக இருந்ததை 110 மாவட்டங்களாக உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் 77 மாவட்டங்களாக இருந்ததை 110 மாவட்டங்களாக உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இதுவரை புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படாமல் இழுத்து வருவதால், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடும் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நவம்பர் 15-க்குள் / நவம்பர் இறுதிக்குள் 110 பேர் பட்டியல் வெளியாகும் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. கடந்த நவம்பர் 1-ம் தேதி, 110 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம் - 3 நாட்களுக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி பிரித்து அறிக்கை தாக்கல் செய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின.
மாவட்ட செயலாளர்களுக்கு வயது உச்ச வரம்பு 70 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், எ.வ.வேலு, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உட்பட 13 சீனியர்கள் பதவியை இழக்க வாய்ப்பு என்கிறார்கள். புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. செந்தில் பாலாஜிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி, கரூரில் அசோக் என பல பெயர்கள் அடிபடுகிறது. இருப்பினும் நாளை (நவ.17) யார் யார் நியமிக்கப்படுவார்கள் என்பது தெரியவரும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.