×

வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம்... திருமாவுக்கு சொல்லும் அண்ணாமலை 

 

 பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது தவறு என்று பல்வேறு கட்சியினரும் சொல்லி வந்த நிலையில், குறிப்பாக விசிகவினர் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில்,  அதில் என்ன தவறு இருக்கிறது.   ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் சொன்ன கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரைக்கும் இரண்டாயிரம் புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று சொன்னார்.

 உடனே திருமாவளவன்,   அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர்.  அதனால் அவருடன்  விவாதிக்க  விசிகவிலிருந்து ஒரு சப்-ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்.   இதை அடுத்து விசிகவின் சங்கத்தமிழன்,  அண்ணாமலைக்கு ஒரு சவால் விடுத்தார்.   24 தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா நேரில் விவாதம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்.  அதற்கு அண்ணாமலை ,  இருபத்தி நாலாம் தேதி நான் பிஸியாக இருக்கிறேன் . வேண்டும் என்றால் இருபத்தி ஆறாம் தேதி நேரில் சந்திக்கலாம் என்று சொன்னார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது .

உடனே அண்ணாமலை,   திருமாவளவன் இடது கையை வலது கை அனைவரும் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து விரும்பும் புத்தகங்களை இருபத்தி ஆறாம் தேதி மதியம் 2 மணிக்கு கொடுக்கலாம்.   நம் அலுவலகத்தில் தயாராக இருக்கும் புத்தகங்களையும் வாங்கி செல்லலாம்  என்றார்.

 இந்நிலையில் இன்று சங்கத்தமிழன் விவாதத்திற்காக கமலாலயம் போக இருந்தார்.  இதற்கிடையில் திருமாவளவன்,  ‘’’’பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்’’ என்று தெரிவித்திருந்தார்.   மேலும்,  ‘’அவர் இதுவரை 20000 புத்தகங்களைப்  படித்திருக்கிறார் எனும்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும்’’ என்று தெரிவித்திருந்தார். 

அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பாஜக சார்பாக புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன்.

1. மனு வாதமும் -ஆர்எஸ்எஸ் ம் விஜயபாரதம் பதிப்பகம்

2. இந்துத்துவா அம்பேத்கர் - ம.வெங்கடேசன்

3.சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்.

4. மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்.

அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள்! என்று  குறிப்பிட்டிருக்கிறார்.  இதற்கு அண்ணாமலை,  அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்களின் கனவை நிறைவேற்றுவோம் வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம் வணக்கத்துடன் அண்ணாமலை  என்றும், அன்பு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கத்துடன் அண்ணாமலை என்று கையெழுத்திட்டு மனு வாதமும் ஆர்எஸ்எஸ் என்கிற நூலினையும் இந்துத்துவ அம்பேத்கர் என்ற நூலினையும் அனுப்புகிறார்.