×

சசிகலாவின் பாதை வேறு..எனது பாதை வேறு! அதிமுகவை மீட்டெடுப்பதே என் இலக்கு - டிடிவி தே என் இலக்தினகரன்

 

அதிமுகவை மீட்டெடுப்பதில் சசிகலாவின் பாதை வேறு, அமமுகவின் பாதை வேறு என தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன்,  அதிமுகவை மீட்டெடுக்கும்  வரை தொடர்ந்து போராடுவோம் என  தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஈரோடு வந்த  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “அமமுகவின் முக்கிய இலக்கு அதிமுகவை மீட்டெடுப்பது. இதற்கான பயணத்தை தொடர்ந்து வருவதுடன் அதை நோக்கி தான் தங்களது செயல்பாடுகள் உள்ளது. சுவாசம் இருக்கும் வரை அதற்காக போராடுவேன், கட்சியில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் சொந்த காரணங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் செல்கின்றனர். அவர்களுக்காக இந்த கட்சியை உருவாக்கவில்லை. 

சசிகலாவின் இலக்கும், எங்களது இலக்கும் ஒன்றாக இருந்தாலும் சசிகலா அதிமுக கட்சியின் பொதுசெயலாளராக நீதிமன்றத்தில் போராடி வருவதாகவும், தாங்கள் ஜனநாயக ரீதியாக மக்களை சந்தித்து, கட்சியை மீட்டெடுக்க அமமுக கட்சி துவங்கி, சின்னத்தை பெற்று போராடி வருவதாகவும், நிச்சயம்  இலக்கினை அடைவோம். சசிகலா பாதை வேறு, எங்களது பாதை வேறு. மடியில் கணம் இருப்பதால் அதிமுகவினர் மக்கள் பிரச்சனைகளை பேச தயங்கி வருகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.