×

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்- சசிகலா

 

ஆத்தூர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்காக பெரம்பலூரில் இருந்து சேலம் நோக்கி கார்கள் புடை சூழ பிரச்சாரவேனில் வந்தார். அப்பொழுது சேலம் மாவட்ட எல்லையில் உள்ள தலைவாசலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலாவிற்கு சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த உற்சாக வரவேற்பின் போது சாலை வாரம் இருந்த நின்று கொண்டிருந்த பொது மக்களுக்கு சசிகலா தனது வேனில் இருந்து அமர்ந்தபடி கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் தலைவாசலில் இருந்து ஆத்தூர் வழியாக சேலம் நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணத்தின் போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் யாரும் தலைவாசல் பகுதியில் தென்படவில்லை. பொதுமக்கள் மட்டுமே சசிகலா வருவதை அறிந்து சாலைகளில் திரண்டனர். 


தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு சசிகலா, பொதுமக்களிடையே பிரச்சார வாகனத்தில் அமர்ந்தவாறு அங்கு கூடியிருந்த சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வரும் தேர்தலுக்குள் அதிமுகவில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைவோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.