×

அமமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள்,  2800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 14 வது தீர்மானமாக தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. அமமுக தொடங்கப்பட்டதிலிருந்து தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை, பல இடங்களில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன் சசிகலாவிற்காக தலைவர் பதவி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எப்போது வந்தாலும் பதவி ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுருப்பது, சசிகலா அமமுகவிற்கு வர வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. 

தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. மேலும் 2 தேசிய கட்சிகளில் ஒன்றில் கூட்டணியுடன் 2024 தேர்தலை சந்திப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.