×

திமுக 18, அதிமுக 5 ஆண்டுகளில் ஆட்சி அமைத்தது; 34 ஆண்டுகளாகியும் பாமக ஆட்சியமைக்கவில்லை- அன்புமணி

 

மதுரை தென்மண்டல பா.ம.க.  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “பாமகவை பார்த்து அனைவரும் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் தான் அதிகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.விமர்சனங்கள் வருவது நல்லதுதான், நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் 1989 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பாமக இன்னும் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் உள்ளது. 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகளில் மக்கள் சோர்ந்து விட்டார்கள். 2026 ஆம் ஆண்டு உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும்


மது புகையிலை கஞ்சாவில் இருந்து இளைஞர்களை திசை திருப்ப வேண்டும். மாவட்டம், ஒன்றிய அளவில் விளையாட்டு அரங்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ஈஷா யோகா மையத்திற்கு ஏன் மத்திய அரசு இவ்வளவு சலுகைகளை தருகிறது என்று தெரியவில்லை? காவேரி காலின் என்று வசூல் செய்த மக்கள் பணத்தில் நட்ட மரங்கள் எங்கே..? ஒரு பெண் இறப்பு விரிவான விசாரணை தேவை. 2024 தேர்தலில் பாமக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும். தமிழக மக்கள் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று தமிழக மக்களின் மீது அக்கறையுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செயல்பட்டு வருகிறார். ஆன்லைன் ரம்மியால 2 மாதத்தில் 10 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தான் காரணம். புதுக்கோட்டை குடிநீர் மலம் கலந்து சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றது  நிர்வாகம் இதை 10 ஆண்டுக்கு முன்பே மாவீரன் ஜெ குரு அவர்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தார்” எனக் கூறினார்.